லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் நடத்திய அதிரடி தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது .
எப்போதும் பதற்றத்துடன் காணப்படும் லெபனான் நாட்டில் அவ்வப்போது வன்முறைகள் வெடிக்கும் என்பதால் அந்நாட்டில் வாழும் மக்கள் சற்று பீதியுடனே தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் லெபனான் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை தொடங்கி உள்ள நிலையில் அந்நாட்டில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Also Read : அதிமுக ஓட்டுகள் விஜய்க்கு செல்லும் – புகழேந்தி விமர்சனம்..!!
லெபனானின் சில குறிப்பிட்டப் பகுதிகளைக் குறிவைத்து தரைவழித் தாக்குதலைத இஸ்ரேல் தொடங்கியதாகவும் . இந்த ராணுவ தாக்குதலுக்கு ‘Operation Northern Arrows’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இப்படி இருக்கும் சுழலில் லெபனான் நாட்டிற்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் நடத்திய அதிரடி தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது .
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 2,672 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.