இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்தி வரும் திடீரென தாக்குதலால் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்று 9-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3,600-ஐ கடந்துள்ளது. இந்நிலையில் தற்போது 5 நாட்களுக்குப் பின் காசாவுக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் முன்வந்துள்ளது.
இதனால், 23 லட்சம் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதனிடையே, வடக்கு காசாவில் இருந்து காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிக்குள் குறிப்பிட்ட பாதை வழியாக மக்கள் வெளியேற வேண்டும் என்றும் மக்கள் வெளியேறும் அந்த சமயத்தில் எந்த தாக்குதலும் நடத்த மாட்டோம் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஈரானில் இருந்தும் காசாவுக்கு மருத்துவ உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா அனுப்பிய ஆயுதங்கள் தாங்கிய 2வது கப்பல் இஸ்ரேல் வந்தடைந்தது.
தற்போது இஸ்ரேல் – காசா இடையே நடந்த போரில் இரு தரப்பிலும் உயிரிழப்பு எண்ணிக்கை 3,600-ஐ கடந்துள்ள நிலையில், காசாவில் மட்டும் 2,300 பேர் உயிரிழந்ததாகவும், 9,700 பேர் காயமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இஸ்ரேலில் பலி எண்ணிக்கை 1,300-ஐ கடந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.