இஸ்ரோவில் ராக்கெட் ஏவு நிகழ்வுகளை வர்ணனை செய்த மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மாரடைப்பால் காலமானார் . தமிழகத்தை சேர்ந்த இவர் கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய பல முக்கிய ராக்கெட்
நிகழ்வுகளில் வர்ணனையாளராக பணியாற்றியுள்ளார்.
இஸ்ரோவின் கட்டுப்பாட்டிலுள்ள ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பல ராக்கெட்டுகளை ஏவுவதற்கான கவுண்டவுனுக்கு குரல் கொடுத்து வந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார் .

கடந்த 2012 ஆம் ஆண்டு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட RISat 1 திட்ட இயக்குனராக பணியாற்றிய வளர்மதி கடைசியாக சந்திரயான் 3 கவுண்டவுனுக்கு குரல் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் திடீர் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது .
நாட்டுக்கும் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதியின் மறைவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் நாட்டு மக்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்