இஸ்ரோவின் 100வது ராக்கெட்டான GSLV F15 இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா தற்போது தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் பல புதிய கண்டுபிடிப்பு ஆற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக ஏராளமான ராக்கெட்டுகளை இஸ்ரோ விண்வெளிக்கு செலுத்தி வருகிறது.
அந்தவகையில் சந்திரயான் 3 திட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பின் தனது அடுத்த இலக்கான சூரியனை ஆய்வு செய்ய ‘ஆதித்யா எல்-1’என்ற விண்கலத்தை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி தீவிர ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
Also Read : பேண்டேஜ் உடன் போடப்பட்ட தையல் – இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு..!!
இந்நிலையில் இன்று இஸ்ரோவின் 100வது ராக்கெட்டான GSLV F15 இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து, NVS-02 என்ற 2,250 கிலோ எடை கொண்ட வழிகாட்டும் ரக செயற்கைக்கோளுடன் இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
NVS-02 செயற்கைக்கோள் தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து, பேரிடர் காலங்களில் துல்லியத் தகவல்களை தெரிவிக்கும் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.