Site icon ITamilTv

தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது தவறில்லை. கோவில் கருவறையில் விளையாடினால் தான் தவறு! எச்.ராஜா!

H. Raja interview

Spread the love

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடிது தவறில்லை என எச். ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள ஒரு திடலில் சுமார் 15-க்கும் மேற்பட்ட நடராஜர் கோவில் தீட்சிதர்கள் நேற்று முன்தினம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

அதனைப் பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலாளரான இளையராஜா கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த தீட்சிதர்களை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதனை பார்த்த தீட்சிதர்கள் இளையராஜாவிடம் ஏன் வீடியோ எடுக்கிறாய்?. அந்த வீடியோவை உடனே அழி.. என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

மேலும், அவர்கள் தாக்கியதில் காயமடைந்த இளையராஜா சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே தன்னை தாக்கிய தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், வி.சி.க. பிரமுகரை தாக்கியதாக 5 தீட்சிதர்கள் மீது நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்களுக்கு பாஜக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “உடற்பயிற்சி எல்லோருக்கும் வேண்டும். எனவே, சிதம்பரம் கோவில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்த தவறும் இல்லை. கோவில் கருவறையில் கிரிக்கெட் விளையாடினால்தான் தவறு” என்று தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version