போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபர் சாதிக்கின் ₹55.30 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது.
டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன் சுமார் 50 கிலோ எடையுள்ள சூடோபெட்ரைன் என்ற போதை பொருள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா தயாரிப்பாளரும், முன்னாள் தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது.
பின்னர் ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது தற்போது டெல்லியில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .
இந்நிலையில் தற்போது ஜாபர் சாதிக்கின் ₹55.30 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் ஹோட்டல், சொகுசு பங்களா மற்றும் ஜாகுவார், மெர்சிடிஸ் போன்ற 7 வகை கார்களையும் அமலாக்கத்துறை முடங்கியுள்ளது.