தனது வீட்டின் பால்கனியில் அரைகுறை ஆடையில் தரக்குறைவாக நடந்துகொண்ட நடிகர் விநாயகன் வீடியோ இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.
கேரள திரையுலகில் பல பன்முக கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி இடம் பிடித்தவர் விநாயகன்.கேரள மொழி படங்கள் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு,ஹிந்தி உள்பட வேற்று மொழிப்படங்களில் விநாயகன் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஜெயிலர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவான இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கே டப் கொடுக்கும் வில்லனாக நடித்து தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் பெற்றுள்ளார்.
Also Read : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மசால் வடை பிரசாதம் – தேவஸ்தானம் அறிவிப்பு..!!
அடுத்தடுத்து பல மாஸ் படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவர் அதிகளவில் மது அருந்தி பல சர்ச்சைக்குரிய செயல்களை செய்து அடிக்கடி கேரள காவல்துறையிடம் சிக்கிக்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அந்தவகையில் தற்போது கேரளாவில் உள்ள தனது வீட்டு பால்கனியில் நடிகர் விநாயகன் அரைகுறை ஆடையில் நின்றுகொண்டு ஆபாசமாகப் பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி செம வைரலாக வலம் வருகிறது .
இச்சம்பவம் குறித்து இதுவரை யாரும் புகார் செய்யவில்லை என்றும், புகார் செய்தால் நடிகர் விநாயகன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொச்சி போலீசார் தெரிவித்துள்ளனர்.