Site icon ITamilTv

மசூதியில் ஏற்பட்ட தீவிபத்தில் இடிந்து விழுந்த ராட்சத குவிமாடம் – வைரல் வீடியோ

Spread the love

இந்தோனேசியாவில் ஜகார்த்தா இஸ்லாமிய மையத்தின் பெரிய மசூதியில் தீப்பிடித்ததில் ராட்சத குவிமாடம் நொறுங்கி விழும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

ஜகார்த்தா இஸ்லாமிய மையத்தில் தற்போது புதுபிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உள்ளூர் நேரப்படி மாலை 3 மணியளவில் அங்கு திடீரென தீப்பிடித்தது. இந்த தீவிபத்தில் மசூதியின் ராட்சத குவிமாடம் இடிந்து நொறுங்கியது.

உடனடியாக அங்குவந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த தீவிபத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை.
தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் குவிமாடம் நொறுங்கியதற்கு முன்பே கட்டடத்திலிருந்து தீப்பிழம்புகள் மற்றும் புகை வருவது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.


Spread the love
Exit mobile version