Site icon ITamilTv

January 25TH 2024 : இன்றைய ராசி பலன்!!

January 25TH 2024

January 25TH 2024

Spread the love

மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன்(January 25th)

மேஷம் :

மேஷ ராசிக்காரர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.

ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம் :

சகோதர வழியில் சிறு சிறு சங்கடங்களும், வீண் செலவுகளும் வர வாய்ப்புண்டு. கணவன் மனைவிக்கு இடையே அந்யோன்யம் அதிகரிக்கும். ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலமாக காரியங்கள் அனுகூலமாகும்.

இன்று விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

இதையும் படிங்க : Slightly Least : சற்று குறைந்தது தங்கம் விலை!

மிதுனம் :

இன்று தெய்வ பக்தி அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலமாக எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

அம்பிகை வழிபாடு நன்மை சேர்க்கும்.

கடகம் :

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செலவுகள் ஏற்படும். இன்று திருமால் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம் :

இன்று உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமையாக இருப்பது நல்லது.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இன்று நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

கன்னி :

இன்று பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். சிலருக்கு பள்ளி கல்லூரி கால நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படும். இன்று மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம் :

இன்று எதிர்பார்த்த காரியம் அணுகூலமாக முடியும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை துணையால் ஆதாயம் கிடைக்கும்.

இன்று லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நன்மை தரும்.

விருச்சிகம் :

சகோதரர்களால் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவுகள் ஏற்படும்.

இன்று முருகப்பெருமான் வழிபாடு நன்மை சேர்க்கும்.

தனுசு :

உறவினர்களால் செலவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

தட்சிணாமூர்த்தி வழிபாடு இன்னல்களை போக்கும்

மகரம் :

தைரியமாக செயல்படும் நாளாக அமையும். புதிய முயற்சிகளை தொடங்கலாம். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொட்ட காரியம் ஜெயமாகும்.

தக்ஷிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

கும்பம் :

கும்ப ராசி நேயர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். சிவபெருமான் வழிபாடு நன்மை தரும்.

மீனம் :

இன்று உறவினர்கள் வகையில் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது.

இதையும் படிங்க : பாஜக பிரமுகர் அமர் பிரசாத்திற்கு போலீசார் வலை வீச்சு!

இன்று விநாயகர் வழிபாடு நன்மை சேர்க்கும்(January 25th).


Spread the love
Exit mobile version