Jayam Ravi – Aarthi couple divorce : நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து சர்ச்சை தற்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், அவர்களின் இந்த முடிவுக்கு ஜெயம் ரவியின் மாமியார் தான் காரணம் என பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார்.
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவந்து ஹிட் அடித்தது. அதன் வெற்றிக்கு பின்னர் ஜெயம் ரவியின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது.
இந்நிலையில், தற்போது அவர் கைவசம் 6 படங்கள் உள்ளன. அந்த வகையில் பிரதர் என்கிற திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்து முடித்துள்ளார். இப்படத்தை ராஜேஷ் இயக்கி உள்ளார். இவர் சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற ஹிட் படங்களை இயக்கியவர்.
இதுதவிர ஜெயம் ரவி கைவசம் ஜீனி என்ற மற்றொரு திரைப்படம் உள்ளது. இப்படத்தை இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய புவனேஷ் அர்ஜுனன் இயக்கி வருகிறார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி, வாமிகா கப்பி ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இது மட்டுமல்லாமல் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை என்கிற திரைப்படத்திலும் ஜெயம் ரவி நடித்து முடித்திருக்கிறார்.
காதலிக்க நேரமில்லை படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படமும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2-விலும் நடித்து வருகிறார்.
இப்படி செம்ம பிசியாக நடித்து வரும் ஜெயம் ரவி, விரைவில் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய உள்ளதாக ஒரு பரபரப்பு தகவல் வெளியாகி கோலிவுட்டில் புயலை கிளப்பி உள்ளது.
இதனிடையே, எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல ஆர்த்தி, சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜெயம் ரவியுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி அதிர்ச்சி கொடுத்தார்.
இப்படி உள்ள சூழலில், இது குறித்து மேலும் ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன் (Jayam Ravi – Aarthi couple divorce).
அவர் கூறியிருப்பதாவது.. “ஜெயம் ரவி – ஆர்த்தி இடையே சண்டை ஏற்பட அவரது மாமியார் தான் காரணம். ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா. இவர் மிகப்பெரிய பணக்காரர்.
கல்பனா ஹவுஸ் என்கிற பங்களாவின் ஓனர், அதுமட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.
ஜெயம் ரவி ஆர்த்தியை திருமணம் செய்த பின்னர் வீட்டோடு மாப்பிள்ளை ஆனார். இதனிடையே ஒரு கட்டத்தில் அவரின் மார்க்கெட் சரியத் தொடங்கியது.
அப்போது அவரை வைத்து படம் தயாரிக்க தொடங்கினார் அவரது மாமியார் சுஜாதா. அப்படி அவர் தயாரித்த படம் தான் சைரன். அந்த படம் முதலுக்கு மோசமில்லாத படமாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவியை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்தார் சுஜாதா.
இப்படத்தில் நடிக்க ஜெயம் ரவி ரூ.25 கோடி சம்பளம் கேட்டுள்ளார். ஆனால், அவரது மாமியார் உங்களுக்கு மார்க்கெட் அவ்வளவு இல்லையே என கூற, ஜெயம் ரவி ரூ.25 கோடி வேண்டும் என விடாப்பிடியாக நின்றார்.
இதனால் இயக்குனர் பாண்டிராஜை அழைத்து படத்தின் பட்ஜெட்டை குறைத்துக் கொள்ளுமாறு கூறி இருக்கிறார் சுஜாதா.
இதெல்லாம் செட் ஆகாது என தெரிந்ததும் பாண்டிராஜ், சுஜாதாவிடம் வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்துவிட்டு, அந்த கதையை விஜய் சேதுபதியிடம் சொல்லி ஓகே வாங்கிவிட்டார்.
இது ஜெயம் ரவிக்கு தெரியவர, இதற்கெல்லாம் மாமியார் சுஜாதா தான் காரணம் என மனைவி ஆர்த்தி உடன் சண்டை போட… தற்போது அந்த சண்டை முற்றி விவாகரத்தில் வந்து நிற்கிறது” எனக் கூறியுள்ளார் பயில்வான்.