ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள பிரதர் படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் இருக்கும் பல முனன்ணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி . திரையுலகில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது நடிப்பில் தற்போது பட்டாசாக உருவாகி உள்ள திரைப்படமே பிரதர்.
Also Read : அலட்சியமாக சாலையை கடந்த பெண் – விபத்தில் சிக்கிய கேரள முதலமைச்சரின் வாகனம்..!!
ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் கதையின் நாயகனாக ஜெயம் ரவி நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார் . மேலும் இவர்களுடன் பூமிகா , நட்டி , VTV கணேஷ் உள்ளிட்ட ஏரளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படம் வரும் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.