பொய்ச் செய்திகளை ஒழிக்க தம்மால் உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் சேனலில் சேருங்கள் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
சமூக வலைதளங்களில் பொறுப்பில்லாமல் பரப்பப்படும் பொய்ச் செய்திகளால் மக்களிடையே பிளவும் வெறுப்பும் ஏற்படும் அபாயம் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. தகவல்களின் உண்மைத் தன்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமெனும் நோக்கில், தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை – செய்திமக்கள் தொடர்புத்துறையின் கீழ் ’தகவல் சரிபார்ப்பகம்’ செயல்பட்டு வருகிறது.
Also Read : முதல்வர் ஸ்டாலின் விரைவில் ஜெய் ஸ்ரீ ராம் என சொல்வார் – அண்ணாமலை
ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு உண்மைத் தகவல்களே ஊட்டச்சத்தாகும். எனவே, சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள வாட்ஸ் அப் சேனல் ஒன்றை கழக அரசின் ‘தகவல் சரிபார்ப்பகம்’ உருவாக்கியுள்ளது.
பொய்ச் செய்திகள் எனும் சமூக நச்சுக் கிருமிகளை அனைவரும் ஒன்றிணைந்து ஒழிக்க, கீழ்க்காணும் QR code-ஐ ஸ்கேன் செய்து, வாட்ஸ்அப் சேனலில் இணைவீர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.