மக்கள் தங்களால் தாங்க முடியாத விலைவாசி உயர்வு குறித்து வேதனையோடு பேசுகிறார்கள். குறிப்பாக சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு மக்களை கடுமையாகப் பாதித்துள்ளதாக ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜோதிமணி கூறிருப்பதாவது :
ஒவ்வொரு மக்கள் சந்திப்பிலும் மக்கள் தங்களால் தாங்க முடியாத விலைவாசி உயர்வு குறித்து வேதனையோடு பேசுகிறார்கள். குறிப்பாக சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு மக்களை கடுமையாகப் பாதித்துள்ளது.
இந்த நெருக்கடியான நேரத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத்ப் திட்டமே கிராமப்புற ஏழை மக்களை பட்டினியிலிருந்து காப்பாற்றுகிறது.
அன்னை சோனியா காந்தி அவர்களின் தீவிர முயற்சியால் திரு. மன்மோகன் சிங் அவர்களின் மக்கள் நல அரசு செயல்படுத்திய மகத்தான திட்டம். உலகிலேயே வறுமை ஒழிப்பிற்கு முன் மாதிரியாகத் திகழ்கிறது. மக்களின் மாறாத அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள் என ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார்.