மரண வாக்குமூலங்கள் பதிவு செய்யும்போது நீதிபதிகளின் செயல்பாடுகளை சந்தேகிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவண்ணாமலையை சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது கள்ளத்தொடர்பை தன் மனைவி தட்டி கேட்டதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு வீட்டிற்குள் வைத்து தீ வைத்து கொளுத்தி விடுகிறார். அக்கம் பக்கத்தினர் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
95% தீ காயம் ஏற்பட்டிருப்பதால் காப்பாற்றுவது கடினம் என மருத்துவர் கூறினர்.இதையடுத்து மாவட்ட நீதிபதி பெண்ணின் மரண வாக்கு மூலத்தை பதிவு செய்கிறார்.
Also Read : வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா – பலி எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு..!!
இந்த வழக்கில் மாவட்ட நீதிமன்றம் ரமேஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்க அதை உயர் நீதிமன்றமும் உறுதி செய்கிறது.
பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ரமேஷ் 95% காயம் பெற்ற தன் மனைவி சுயநினைவுடன் இருந்திருக்க முடியாது அதனால் அவர் கொடுத்த மரண வாக்குமூலம் செல்லாதது எனவே தன்னை விடுவிக்க வேண்டும் என கேட்டு இருந்தார்.
மரண வாக்குமூலங்கள் பதிவு செய்யும் பணியில் ஈடுபடும் மாவட்ட நீதிபதிகளின் செயல்பாடுகளை யாரும் சந்தேகிக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.