June 29 Gold Rate : இன்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.53,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஏற்றம், தங்கத்தில் முதலீடு செய்யும் அனைவரையும் பிரமிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.
பொதுவாக எந்த சொத்தும் விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது தான். அதில் தங்கமும் அடக்கம்.
மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாரம்பரியமாக விரும்புகிறார்கள், ஏனெனில் இது பாதுகாப்பான முதலீடு என்பதனால்.
இதையும் படிங்க : பிரபல நடிகைக்கு புற்றுநோய் : இன்ஸ்டாவில் உருக்கம்!
அதுமட்டுமல்லாமல், காலப்போக்கில் இது மற்ற சொத்து வகுப்புகளுடன் ஒப்பிடும்போது நிலையான வருமானத்தை வழங்குகிறது.
மேலும், அன்றைய காலகட்டத்தில் தங்கம் உள்ள விலையில் விற்க எளிதானது.
நேற்று (28.06.24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.41 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,666க்கும், சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,328க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று (29.06.24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 அதிகரித்து கிராம் ரூ.6,685க்கும் சவரனுக்கு ரூ.152 அதிகரித்து ஒரு சவரன் ரூ.53,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (28.06.24) 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5460க்கும் ஒரு சவரனுக்கு ரூ.264 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,680க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று (29.06.24) 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5476க்கும் ஒரு சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,808க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.94.50-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.94,500-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.94.50க்கும், ஒரு கிலோ ரூ.94,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது (June 29 Gold Rate).