கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விசிக வரவேற்கிறது என திருமாவளவன்(Thirumavalavan) தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் ராமாசாமி படையாட்சியாரின் 106வது பிறந்த நாளையொட்டி சென்னை கிண்டி ஹால்டா சந்திப்பில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு விசிக தலைவர் திருமாவளன் மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. நேற்று தொடங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாட்டுக்கே முன்மாதிரியான திட்டம். இதை கட்சி சார்பற்ற முறையில் அனைவரும் வரவேற்று பாராட்ட வேண்டும். இந்த திடத்தை விசிக வரவேற்கிறது. வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது என நம்புகிறேன்.
மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை விசிகவும் ஏற்கவில்லை.. இந்தியா கூட்டணியும் ஏற்கவில்லை.இன்றைக்கு நேற்றைக்கு அல்ல; காலம் காலமான சனாதானம் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்தியா கூட்டணி இந்து மக்களுக்கு எதிராக உள்ளது என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிகபழிக்காது். இந்தியா கூட்டணி இந்துக்களுக்கு எதிரானது அல்ல; பாஜக, சன்பரிவார்கள் கூட்டத்திற்கு எதிரானது. இந்தியா கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் அவர்கள் கனவு பழிக்காது என தெரிவித்துள்ளார்.