மாபெரும் வெற்றி பெற்ற ‘ஜெயிலர்’ : இசையமைப்பாளர் அனிருத்துக்கு தரமான சர்ப்ரைஸ் கொடுத்த கலாநிதி மாறன்

ஜெயிலர் படம் பிளாக் பஸ்டர் வெற்றி பெறுவதற்கு தனது இசை மூலம் முக்கிய பங்காற்றிய இசையமைப்பாளர் அனிருத்துக்கு சிறப்பான தரமான சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவருக்கு புத்தம் புதிய‘PORSCHE’ கார் ஒன்றை பரிசாக வழங்கி அசத்தியுள்ளார் .

நெல்சனின் நேர்த்தியான இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிரட்டலான நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். சன் பிச்சர்ஸ் நிறுவனத்தின் மாபெரும் பொருட்செலவில் இப்படம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டது .

ரசிகர்களின் ஏகபோக எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்துள்ளது.

ராக் ஸ்டார் அனிருத்தின் மாஸான இசையமைப்பில் உருவானா இப்படத்தில் ரஜினிகாந்துடன் கவர்ச்சி நாயகி தமன்னா, மோகன் லால், சிவராஜ்குமார் , ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ,வசந்த் ரவி , ரெடின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் தங்களது நடிப்பை கட்சிதமாக வெளிப்படுத்தியுள்ளனர் .

ஜெயிலர் படம் வெளியான முதல் நாளில் இருந்தே நல்ல வசூலை ஈட்ட தொடங்கிய நிலையில் இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 600 கோடி வரை வசூல் செய்துள்ளது.மேலும் இப்படம் அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்திலும் விரைவில் வெளியாக உள்ளது.

படத்திற்கு படம் தனது இசையால் மக்களின் மனதை கொள்ளையடித்து வரும் ராக் ஸ்டார் அனிருத் ஜெயிலர் படத்திலும் தனது பங்களிப்பை முழுமையாக கொடுத்துள்ளார் . இப்படத்தில் வந்துள்ள பின்னணி இசை முதல் பாடல்கள் வரை ரசிகர்களை இன்று வரை மெய்சிலிர்க்க வைக்கிறது அதிலும் அந்த காவாலா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் ஜெயிலர் படம் பிளாக் பஸ்டர் வெற்றி பெறுவதற்கு தனது இசை மூலம் முக்கிய பங்காற்றிய இசையமைப்பாளர் அனிருத்துக்கு சிறப்பான தரமான சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவருக்கு புத்தம் புதிய‘PORSCHE’ கார் ஒன்றை பரிசாக வழங்கி அசத்தியுள்ளார்.

இதற்காக அனிருத் அவர்களிடம் வெவ்வேறு கார்கள் காண்பிக்கப்பட்ட நிலையில், அவர் இங்க் ப்ளூ நிற ‘PORSCHE’ காரை தேர்வு செய்தார்.மேலும் இதுகுறித்து வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது .

இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

Total
0
Shares
Related Posts