கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ள சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை வாங்கி 100க்கும் மேற்பட்டோர் குடித்துள்ளனர்.
சாராயத்தை குடித்த சில நிமிடங்களில் குடிமகன்களுக்கு வாந்தி கண் எரிச்சல் தலை சுற்றல் ஏற்பட்டதை அடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம், சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அடுத்தடுத்து உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டது.
மருத்துவர்கள் எவ்ளோவோ காப்பாற்ற போராடினாலும் இன்று வரை உயிரிழப்புகள் அதிகரித்து தான் வருகிறது அதன்படி தாப்ரோது வரை கள்ளக்குறிச்சியில் விஷ சாராய சம்பவத்தில் 63 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதுமட்டுமின்றி கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.