நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் – கமல்ஹாசன் வாழ்த்து

பல நூறு மனிதர்களைத் தனக்குள்ளிருந்து எடுத்து உலகத்துக்குத் தந்த ஒற்றை மனிதக் கலைமகன் மாபெரும் நடிப்புக் கலைஞர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளில் அவரை வாழ்த்துவது நமக்குப் பெருமை என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனது நடிப்பாலும் புரட்சிகரமான வசனங்களாலும் நடிகர் திலகம் என பெயரெடுத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் மலர்தூவி மரியாதை செய்தனர்.

இதையடுத்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்தம் நினைவுகளை பகிர்ந்துள்ளார் .

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் கமலஹாசன் கூறிருப்பதாவது

பல நூறு மனிதர்களைத் தனக்குள்ளிருந்து எடுத்து உலகத்துக்குத் தந்த ஒற்றை மனிதக் கலைமகன். நடிப்பாக அல்ல, வாழ்க்கையாகக் கலையை முன்வைத்தவர்.

உலகின் சிறந்த நடிகர்களுக்கு, தமிழ்நாட்டின் பதில் என்று சொல்லத் தக்கவர், மாபெரும் நடிப்புக் கலைஞர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் இன்று. வாழ்த்துவது நமக்குப் பெருமை தனது ட்விட்டர் பதிவில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Total
0
Shares
Related Posts