கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் இன்று NETFLIX ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்திய சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். விக்ரம் என்ற பிளாக் பஸ்டர் படத்தை கொடுத்த கையோடு இவரின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகி உள்ள படம் இந்தியன்2.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் மிக பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது . கடந்த சில வருடங்களாக பல இன்னல்களை சந்தித்த இப்படம் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது
அனிருத் இசையில் உருவான இப்படத்தில் உலகநாயகனுடன் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உலகளவில் மிகவும் பிரபலமான NETFLIX ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.