நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பயணம் முடிந்து சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் தெரிவிக்கையில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்ததாகவும், அதனை தொடர்ந்து பரிசோதனை செய்ததாகவும், பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ள அவர், இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.
சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.