சனாதனம் குறித்து கருத்து தெரிவிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முழு உரிமை உண்டு என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு ,கொரனோ ,மலேரியா இதை எல்லாம் நாம் எதிர்க்க கூடாது அதனை ஒழித்து கட்ட வேண்டும். அப்படி தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்க்க கூடாது அதனை ஒழுத்து கட்டவேண்டும் என காரசாரமாக பேசியிருந்தார்.
அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சுக்கு பாஜகாவை சேர்ந்த அமித்ஷா முதல் அண்ணாமலை வரை கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களில் உதயநிதி மீது புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது .
நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சில அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் ஆதரவும் கொடுத்து வருகின்றனர் . அந்தவகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அமைச்சர் உதயநிதிக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.
நாட்டின் முக்கிய பிரச்சனையாக பேசப்படும் தமிழக அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ள கமல்ஹாசன் கூறிருப்பதாவது :
சனாதனம் தொடர்பாக கருத்து தெரிவிக்க அமைச்சர் உதயநிதிக்கு உரிமை உண்டு அமைச்சர் உதயநிதியின் கருத்துகளில் உடன்பாடு இல்லை எனில் விவாதத்தில் ஈடுபடலாம் .அதைவிட்டுவிட்டு மிரட்டல் விடுப்பது, வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.
ஆரோக்கியமான விவாதங்களுக்கு தமிழ்நாடு எப்போதும் பாதுகாப்பான இடமாக இருந்து வருகிறது இணக்கமான சமூகத்தை வளர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான விவாதங்களை ஏற்றுக் கொள்வோம் உண்மையான ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு கருத்து மாறுபாடுகள், விவாதத்தில் ஈடுபடும் திறன் ஆகும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.