கர்நாடகா முதல்-அமைச்சர் சித்ராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கிய விவகாரம் தொடர்பாக முதல்வர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தில் விசாரணை நடத்த அம்மாநில ஆளுநர் அனுமதி வழங்கி உள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சமீப காலமாக அரசியல் சர்ச்சைகள் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அந்த வகையில், சில நாட்களுக்கு முன்னர் வால்மீகி வாரிய நிதி முறைகேடுகளால் அமைச்சர் நாகேந்திரா பதவியை இழந்தார்.
தொடர்ந்து மீண்டும் இப்போது மூடா முறைகேடு வழக்கு கர்நாடக காங்கிரஸ் அரசிற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில், 14 வீட்டுமனைகள் முறைகேடாக வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தன்னுடைய மனைவிக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்ததற்கு இழப்பீடாகவே இந்த மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று சித்தராமையா விளக்கமளித்துள்ளார்.
இதையும் படிங்க : திருமாவளவன் பிறந்தநாள் : முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து!!
இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பிய நிலையில், முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. மேலும் சட்டசபை, மேல்சபை கூட்டத்திலும் இந்த விவகாரம் பேசப்பட்டு வருகிறது.
இதனிடையே இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக தொடர்ந்து அம்மாநில ஆளுநரிடம் வலியுறுத்தி வந்தது.
மறுபக்கம் மைசூரை சேர்ந்த சமூக ஆர்வலரான ஸ்னேகமயி கிருஷ்ணா என்பவர், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மனு தாக்கலும் செய்திருந்தார். அதன்படி, இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் சித்தராமையாவிடம் விளக்கம் கேட்டிருந்தார்.
தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர அம்மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.