கவனத்தை ஈர்க்கும் கார்த்தியின் ‘ஜப்பான்’ பட டிரைலர்.!!

கார்த்தியின் குதூகலமான நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி பல நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் நடிகர் கார்த்தி . இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ‘ஜப்பான்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது .

திருட்டை மையமாக வைத்து தயாராகியுள்ள இப்படத்தில் கார்த்திக் ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்க சுனில், விஜய் மில்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி பிரகாஷ் இசையமைப்பில் தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளில் நேற்று வெளியாகியுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது ரசிகர்களின் அமோக ஆதரவு பெற்று வருகிறது.

அழகான பல நல்ல கதைகளை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் கார்த்தி படத்திற்கு படம் ஏதாவது ஒரு புதுமையை புகுத்தி வருகிறார்.அந்தவகையில் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ள ஜப்பான் படம் கார்த்திக்கு வழக்கம் போல் வெற்றியை தேடி தருமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

Total
0
Shares
Related Posts