மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ஆவது நினைவு தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழக அரசியல் வரலாற்றில் அன்றும் இன்றும் என்றும் யாராலும் மறக்க முடியாத அடையாளமாய் திகழ்பவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி . தமிழகத்தின் ஐந்து முறை முதலமைச்சர் என பன்முகத் தன்மையோடு விளக்கியுள்ளார்.
இந்நிலையில் கலைஞரின் 6வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.
Also Read : சென்னை விமான நிலையத்தில் ₹40 லட்சம் மதிப்புடைய அகில் மரக்கட்டைகள் பறிமுதல்..!!
சென்னை அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி சிலை அருகிலிருந்து இந்த அமைதிப் பேரணி தொடங்கி வாலாஜா சலை வழியாக , காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் வரை சென்று இந்த பேரணியானது நிறைவு பெறுகிறது.
இந்த அமைதி பேரணியில் திமுக இணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி , அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, சேகர் பாபு, ஆ.ராசா எம்.பி., தயாநிதிமாறன் எம்.பி., உள்ளிட்ட பல அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.