அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் விரைவில் பொறுப்பேற்க்க உள்ள நிலையில் தற்போது அமெரிக்க புலனாய்வு பிரிவான FBI-ன் இயக்குநராக காஷ் படேலை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸை வீழ்த்தி குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.
இதன்முலம் அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் விரைவில் பொறுப்பேற்க்க உள்ளார்.
Also Read : ஹெச். ராஜாவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை..!!
இந்நிலையில் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான FBI-ன் இயக்குநராக காஷ் படேலை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ஒரு சிறந்த வழக்கறிஞர், புலனாய்வாளர், அமெரிக்காவின் முதல் போராளியை நியமிப்பதில் பெருமை கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியான காஷ், முந்தைய டிரம்ப் ஆட்சியில் பாதுகாப்புத் துறை தலைவராகவும், தேசிய உளவுத்துறையின் இணை இயக்குநராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.