star movie review : ஸ்டார் படத்தில் உள்ள சர்ப்ரைஸ்களை வெளியில் சொல்ல வேண்டாம் என படத்தின் இயக்குநர் இளன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘டாடா’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஸ்டார்’.
இன்று கவின் நடிப்பில் வெளியாகியுள்ள ஸ்டார் படத்தை பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரிதுள்ளனர்.
இதையும் படிங்க : நயன்தாரா அக்காவாக நடிக்க இத்தனை கோடி சம்பளமா? – ஆடிப்போன படக்குழு!
இந்தப் படத்தை ‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் இயக்கியுள்ளார்.
கதாநாயகனாக கவின் மற்றும் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், ஸ்டார் படம் இன்று (10.05.24) திரையங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (09.05.24) இயக்குனர் இளன் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில்,
“ஸ்டார் நாளை முதல். இந்தப் படத்தை என்னுடைய தந்தை ‘ஸ்டில்ஸ் பாண்டியன்’ அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். உங்களிடம் தாழ்மையான வேண்டுகோள்.
நாளை நீங்கள் படத்தை பார்த்துவிட்டு, படத்தில் உள்ள மூன்று முக்கியமான சர்ப்ரைஸை வெளியில் சொல்ல வேண்டாம். என்னுள் இருக்கும் கலைஞன் எல்லாரும் அந்த சர்ப்ரைஸை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நன்றி” என பதிவிட்டிருந்தார்.
தொடர்ந்து இன்று ஸ்டார் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் இயக்குனர் இளன் எக்ஸ் பக்கத்தில் தனது தந்தை குறித்து பகிர்ந்த பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அந்த பதிவில்,
‘ஸ்டார் படத்தில் என் அப்பா தோன்றிய போது அரங்கம் அதிர ஒலித்த கைத்தட்டலால் இன்றைய நாள் எனக்கு சிறப்பாக அமைந்தது.
என் வாழ்வில் இது எனக்கு சிறந்த தருணமாக இருக்கும். என் தந்தையின் நீண்டநாள் கனவு நிறைவேறியது’ எனத் தெரிவித்துள்ளார் (star movie review).
இதையும் படிங்க : 499 மதிப்பெண்கள்.. கூலித் தொழிலாளியின் மகள் சாதனை