சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு வணிகர்கள் நல வாரியம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் வீதிகளில் தமிழைக் காண முடியவில்லை என யாரும் சொல்லக்கூடாது. கடைகளில் தமிழில் பெயர் வைக்க வணிகர்கள் முன் வர வேண்டும்.
குறிப்பாக சிறு வணிகர்களும் வணிக நிறுவனங்களும் நிதி வளர்ச்சிக்கு மட்டுமல்ல மனித வளர்ச்சிக்கும் அடிப்படையானவை. வணிகர்களின் கோரிக்கையை எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து தெரிவிக்கலாம்.
நமக்கு இடையில் இடைத்தரகர்கள் கிடையாது அவை இருக்கவும் கூடாது. வர்த்தகமாக இல்லாமல் சேவை மனப்பான்மையுடன் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். வணிகர்களின் கோரிக்கைகளை தெரிவித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.