ITamilTv

சமந்தாவிற்கு ஆறுதல் சொன்ன கீர்த்தி சுரெஷ்..

Spread the love

நடிகை சமந்தாவிற்கு தற்போது அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சமந்தா பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் தனக்கு மயோசைட்டிஸ்’ எனப்படும் தசை அழற்சி நோய் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நோய் குணமாக எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் ஆகும் போல் தெரிகிறது என்று சமந்தா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

keerthy suresh

நோய் பாதிப்பில் தான் போராடி வருவதாகவும்,இதன் மூலம் மோசமான நாட்களை எதிர்கொண்டு இருக்கிறேன் என்றும் விரைவில் குணமடைவேன் என்ற நம்பிக்கை உள்ளது என சமந்தா தெரிவித்துள்ளார்.சமந்தா குணமடைய அவர்களுடைய ரசிகர்கள் தற்போது சமூக வலைதளத்தில் சமந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே நடிகை சமந்தாவின் தோழியான கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சமந்தாவின் புகைப்படத்தை பகிர்ந்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘உனக்கு அதிகமான சக்தி கிடைக்கும் விரைவில் குணமடைந்து வலிமையோடு திரும்பி வருவாய்,என்று கூறியுள்ளார் மேலும் பல நடிகர் நடிகைகள் தற்போது நடிகை சமந்தா குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Spread the love
Exit mobile version