கேரள குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பொறுப்பேற்று திருச்சூர் காவல் நிலையத்தில் ஒருவர் சரண்..!!

கேரளா களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று திருச்சூர் காவல் நிலையத்தில் ஒருவர் சரண்ணடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே களமசேரி பகுதியில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டத்தில் இன்று குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது .

சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பயங்கர சத்தத்துடன் 3 குண்டுகள் வெடித்துள்ளது . இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 52 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் . குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

இதேபோல் இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் என்.ஐ.ஏ, தேசிய பாதுகாப்பு படை மற்றும் கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருதாகவும் கேரள டிஜிபி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கேரளா களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று திருச்சூர் காவல் நிலையத்தில் ஒருவர் சரண்ணடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சரணடைந்தவர் பெயர் டோமினிக் மார்டின் எனவும், குண்டு வெடிப்பு நடந்த ஜெஹோவா விட்னெசெஸ் சபையின் உறுப்பினராக இருந்தவர் எனவும் மாநில சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தகவல் தெரிவித்துள்ளார்.

Total
0
Shares
Related Posts