கேரளாவில் காதலனுக்கு கசாயத்தில் விஷம் வைத்துக் கொன்ற காதலிக்கு மரண தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலையைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் ஷாரோன் ராஜ்(23). பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்த இவர் களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கீரிஷ்மா என்கிற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
கீரிஷ்மாவுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், வீட்டுக்குத் தெரியாமல் அவர் ஷாரோன் ராஜை காதலித்து வந்துள்ளார் . இருவரும் வெட்டுக்காடு சர்ச்சில் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒரு நாள் ஷாரோனை தனது வீட்டிற்கு அழைத்த கீரிஷ்மா, அவருக்கு ஜூஸ் குடிக்க கொடுத்துள்ளார் . பின்னர் நண்பருடன் சென்றுகொண்டிருந்த போது ஷாரோன் ராஜ் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைய இறுதியில் சிகிச்சை பலனின்றி ஷாரோன் ராஜ் உயிரிழந்தார்.
இதையடுத்து மகனின் இறப்பு குறித்து ஷாரோன் ராஜின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் க்ரீஷ்மாவிடம் நடத்திய விசாரணையில் களைக்கொல்லி பூச்சிமருந்தை கஷாயத்தில் கலந்து ஷாரோன் ராஜுக்குக் கொடுத்ததாக ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை இத்தனை நாட்கள் நடைபெற்று வந்த நிரையில் க்ரீஷ்மா தான் குற்றவாளி என நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது .
இந்நிலையில் கிரீஷ்மா மற்றும் அவரது தாய்மாமன் நிர்மல்குமார் ஆகியோரின் தண்டனை விவரங்களை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அதன்படி காதலி க்ரீஷ்மாவுக்கு மரணதண்டனையும் தாய்மாமன் நிர்மல்குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்பளித்ததுள்ளது.