kilambakkam bus stand : கோயம்பேட்டில் பயணிகளை ஏற்ற ஆம்னி பஸ்கள் உரிமைகோரிய வழக்கில், வழித்தட வரைபடத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னையின் புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் (kilambakkam bus stand) தென் மாவட்டங்களுக்கான பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தை, கடந்த டிசம்பர் 30ம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்படுகிறது.
முன்னதாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் (kilambakkam bus stand) இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ஆம்னி பஸ்களும் இயக்கப்பட வேண்டும் என கடந்த ஜன 24ல் போக்குவரத்து துறை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
https://x.com/ITamilTVNews/status/1755550770219602124?s=20
அந்த மனுவில், ‘இந்த வழக்கு முடியும் வரை கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க : Migjam relief amount -ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு விரைவில்… தமிழக அரசு
ஆம்னி பஸ்கள் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளை சூரப்பட்டு, போரூர், தாம்பரத்தில் ஏற்றி, இறக்க அனுமதிக்கப்படும்.
பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கி விட மட்டும் அனுமதி வழங்கப்படும் என அப்போது தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, எந்தெந்த வழித்தடங்களில் ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்ற அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து வரைபடம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
சென்னைக்குள் பயணிகளை ஏற்ற அனுமதி வழங்கினால், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் கொண்டு வந்த நோக்கமே வீணாகிவிடும் என தெரிவித்த ஐகோர்ட் நீதிபதிகள், வழக்கை பிப்ரவரி 9ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்