Site icon ITamilTv

தனது மகளின் பெயரை நாட்டில் வேறு யாரும் வைத்திருக்கூடாது – ஒரு கிழமை கெடுவிதித்த கிம் ஜாங் உன்

Spread the love

வடகொரியாவின் அதிபராக இருக்கும் கிம் ஜாங் அன், அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தி அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அச்சுறுத்தி வருகிறார்.

உலகின் மர்ம தேசமாக அறியப்படும் அந்த நாட்டில், மக்களும் எந்த வித வெளி உலக தொடர்பும் இல்லாமலே வைக்கப்பட்டனர். ஊடகங்களுக்கு கட்டுப்பாடு, கருத்து சுதந்திரங்கள் கிடையாது, சமூக வலைத்தளங்களுக்கு அனுமதி கிடையாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள வடகொரியாவில், அரசு விரும்பும் செய்திகளை மட்டுமே வெளியிட முடியும் என்று சொல்லப்படுகிறது. இதனால் வடகொரியாவில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் உறுதியாக தெரியாது.

சிறிய தவறுகளுக்கு கூட மிகக் கொடூரமான தண்டனைகள் விதிக்கும் வடகொரிய அதிபர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவரது தந்தை மரணத்திற்கு துக்கம் அனுசரிப்பதற்காக, அந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சிரிப்பதற்கும் மது அருந்துவதற்கும் தடை விதித்து கடுமையான உத்தரவை பிறப்பித்து இருந்தார்.

இது போன்று சர்வதேச நாடுகள் வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதித்துள்ளதால் அந்த நாட்டில் கடுமையான பஞ்சமும் நிலவி வருகிறது.
இந்த நிலையில் தனது மகளின் பெயரை வடகொரியாவில் எந்த ஒரு குடிமக்களும் வைக்கக் கூடாது என புதிய உத்தரவை வடகொரியா புறப்பித்துள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் என 3 பிள்ளைகள் உள்ளதாக கூறப்படும் நிலையில், தனது நாட்டைப் போலவே குடும்பம் பற்றியும் ரகசியம் காத்து வந்த கிம் ஜாங் அன், சமீபத்தில் 1௦ வயது மதிக்கத்தக்க தனது மகளை பொதுவெளியில் அறிமுகப்படுத்தினர். சமீப காலமாக ராணுவ கூட்டங்களுக்கு கூட தனது மகளுடன் கிம் ஜாங் அன் வலம் வருகிறார்.

இந்த நிலையில் தனது மகள் ஜூ ஏ யின் பெயரை யாரும் வைக்கக்கூடாது என்றும் யாருக்கு எல்லாம் ஜூ ஏ என்று பெயர் இருக்கிறதோ அவர்களை எல்லாம் கண்டறிந்து அவர்களில் பெயரை ஒருவாரத்திற்குள் மாற்ற வட கொரிய அதிகாரிகள் அறிவுறுத்தி வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.


Spread the love
Exit mobile version