இந்தியாவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ‛ கூ ‘ என்னும் சமூக வலைதள நிறுவனம் கடந்த கடந்த 2019 ஆண்டு துவங்கப்பட்டது . இதனை அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் ஆகியோர் துவக்கினர்.
ட்விட்டர் தளத்திற்கு போட்டியாக துவங்கப்பட்ட இந்த ஆப்பை தினமும் 21 லட்சம் பேர் பயன்படுத்தினர்.
மாதம் 1 கோடி பயனர்கள் இருந்தனர். 9 ஆயிரம் பிரபலங்கள் இதில் இணைந்திருந்தனர் .
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட இந்த நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகளும் குவிந்து வந்தது .
தமிழ், ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் இந்த தளத்தை பயன்படுத்த முடியும் என்பதால் இந்த தளத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது.
Also Read : உலகக்கோப்பையுடன் தாயகம் திரும்பியது இந்திய கிரிக்கெட் அணி..!!
இந்நிலையில் திடீர் நிதி நெருக்கடி காரணமாக, இங்கு பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது. நிதி நெருக்கடி, தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்கான பராமரிப்பு செலவு உள்ளிட்ட பல பிரச்னைகள் காரணமாக இந்த நிறுவனம் நீண்ட நாட்களாக ஸ்தம்பித்து நின்றது .
இந்நிலையில் எல்லாம் கைமீறி போன காரணத்தினால் இந்த நிறுவனத்தை தற்போது நிரந்தரமாக மூட முடிவு அதன் நிறுவனர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.