மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகரான KPY பாலா நேரில் சென்று நிதி உதவி வழங்கியுள்ளது அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனை சுற்றுலா பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது . இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படிப்படியாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
வரலாறு காணாத இந்த பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காக்கவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யம் திரை பிரபலங்கள் பலர் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரும் நிலையில் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகரான KPY பாலாவும் பொதுமக்களுக்கு உதவிட களமிறங்கியுள்ளார் .
சின்னத்திரை நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் மனதில் இடம்பிடித்த KPY பாலா இன்று மக்கள் போற்றும் நாயகனாக வாழ்ந்து வருவதற்கு அவரது நகைச்சுவை மற்றும் காரணம் அல்ல மக்களுக்காக அவர் செய்தி வரும் நற்பணிகள் தான் .
அந்த வகையில் சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு KPY பாலா நிதி உதவி வழங்கியுள்ளார்.
சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட சுமார் 200 குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டு லட்சம் நிதி உதவி செய்துள்ளார் பாலா . பெரிய பெரிய பிரபலங்களே செய்ய தவறிய உதவியை வளர்ந்து வரும் நடிகர்கள் தற்போது பொறுப்புணர்ந்து செய்து வருவது மக்கள மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.