கிருஷ்ணகிரி அருகே உள்ள பள்ளியில் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை போலீசார் கைது செய்துள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைள் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் விளக்கம் கொடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே என்.சி.சி பயிற்சி முகாமிற்கு சென்ற 10க்கும் மேற்பட்ட மாணவிகளை என்.சி.சி. பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியான சிவராமன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின்பேரில் தனிப்படை அமைத்து சிவரமானை தேடி வந்த நிலையில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் தனியார் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Also Read : சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் பட ரிலீஸ் தேதி வெளியானது..!!
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை போலீசார் கைது செய்துள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைள் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் சரயு விளக்கம் கொடுத்துள்ளார்.
செய்தியாளர்களை இன்று சந்தித்த சரயு கூறியதாவது :
புகார் பெற்ற உடன் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை நடத்தி தேவையான ஆலோசனை, உளவியல் உதவிகள் மேற்கொள்ளப்படுகிறது
இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மற்றும் குற்றத்தை மறைக்க முயன்ற நபர்களையும் போக்சோவில் கைது செய்துள்ளோம்
போலியாக NCC முகாம் நடத்தி, வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்
வேறு எந்த பள்ளிகளில் இதுபோன்ற போலி முகாம்கள் நடத்தியுள்ளனர் என்ற விசாரணையும் நடத்தப்படுகிறது
பாலியல் தொந்தரவு, வன்கொடுமை போன்ற புகார்களை 1098 என்ற எண்ணை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என சரயு தெரிவித்துள்ளார்.