மதுரை (Madurai) மாவட்டத்தில் வசிக்கக்கூடிய அனைத்து குறிஞ்சி குறவர்களுக்கும் தாய்மொழியான தமிழ் மொழி பேசக்கூடிய மூத்த குடியான குறிஞ்சி நிலத்தின் குறவர்கள் சார்ந்த இடமும் வீடு அற்ற நிலையில், தினக்கூலியாக தொழில் செய்து வருவதாகவும், குறிஞ்சி குறவர் மக்களுக்கு இலவச வீடு வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மதுரை (Madurai) ராஜாக்கூர் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பல இருப்பிடங்களும், வீடுகளும் காலியாக உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் குறிஞ்சி குறவர்களுக்கு வீடுகள் ஒதுக்க வேண்டும் என குறிஞ்சியர் மக்கள் ஜனநாயக இயக்கத்தின் சார்பாக,
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் குறிஞ்சியர் மக்கள் ஜனநாயக இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பவானி, முத்து காலீஸ்வரி, சித்ராதேவி தலைமையில், மதுரை ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.