100க்கும் மேற்பட்ட உயிர்களை காவுவாங்கிய வயநாடு நிலச்சரிவு ஏற்படுத்திய பாதிப்புகளை நேரில் காண நாளை அல்லது நாளை மறுநாள் பிரதமர் மோடி வயநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரளா மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் மலையாற்று வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது .
இந்நிலையில் இந்த தொடர் மழையால் வயநாட்டில் இன்று அடுத்தடுத்து 2 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவில் 100க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
Also Read : வயநாடு நிலச்சரிவில் தமிழர் உயிரிழப்பு – நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!
இந்நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, இந்த பேரிடர் காலத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார் .
இதுமட்டுமின்றி நிவாரணங்கள் மற்றும் நிதியுதவியும் அனுப்புவதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி வயநாடு நிலச்சரிவு ஏற்படுத்திய பாதிப்புகளை நேரில் காண நாளை அல்லது நாளை மறுநாள் வயநாடு வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.