”அடடே..மாணவர்களுக்கு லேப்டாப்..பசு சாணம் கொள்முதல்..”- ராஜஸ்தான் காங்கிரஸ் வாக்குறுதி!!

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் காங்கிரஸ் சார்பில் 5 வாக்குறுதிகளை முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.நவம்பர் 25-ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

அந்த வகையில் ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க மக்களை கவரும் வகையில் பல்வேறு வழக்குகளை அறிவித்துள்ளது. அதில் குறிப்பாக 1.05 கோடி குடும்பங்களுக்கு ரூ.500-க்கு சமையல் காஸ் சிலிண்டர் வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தான் முதல்வர் அசோக் கெலாட் மேலும் 5 வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

5 வாக்குறுதிகள்:

ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

அரசு கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் ஆங்கில வழி கல்வி நடைமுறை அமல் செய்யப்படும்.

விவசாயிகளிடம் இருந்து பசு சாணம், கோமியம் வாங்கப்படும். இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு தலாரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Total
0
Shares
Related Posts