சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் (Governor’s explanation) பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த ஆளுநர் ரவியை பேரவை தலைவர் அப்பாவு, துணை தலைவர் பிச்சாண்டி மற்றும் பேரவை செயலர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
தொடக்கத்திலும், இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற கோரிக்கையை ஆளுநர் ஆர்.என்.ரவி முவைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதை அவையில் நிராகரிக்கப்பட்டது.
மேலும் உரையில் உள்ள பல அம்சங்களை ஏற்கவில்லை என்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் பாரத் என கூறி 2 நிமிடங்களில் தனது உரையை முடித்துக் கொண்டார்.
அமைச்சர் துரைமுருகன் தனது உரையை ஆரம்பிக்கும்போது ஆளுநர் ரவி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதையடுத்து தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 22ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்தார்.
பிப்ரவரி 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை எனவும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று காலை ஆளுநர் உரையின்போது நடந்தது என்ன? என்பது குறித்து தற்போது ஆளுநர் மாளிகை விளக்கம் கொடுத்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
ஆளுநரின் உரையின் வரைவு அறிக்கையை, அரசிடமிருந்து கடந்த 9-ம் தேதி ராஜ்பவன் பெற்றது. அதில், உண்மையற்ற பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
முதலில், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக, கடந்த காலங்களில் முதல்வர் மற்றும் சபாநாயகருக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார்.
இரண்டாவதாக, ஆளுநரின் உரையானது அரசின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பிரதிபலிக்க வேண்டும்.
இந்நிலையில், ஆளுநர் இன்று காலை 10 மணியளவில் அவையில் உரையாற்றினார்.
அவர் தனது உரையில், சபாநாயகர், முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், தமிழக மக்களின் நலனுக்காக இந்த சட்டப்பேரவை அமர்வு பயனுள்ளதாக அமைய வாழ்த்துவதாகவும் கூறி ஆளுநர் தனது உரையை முடித்தார்.
ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். சபாநாயகர் வாசித்து முடிக்கும் வரை ஆளுநர் அவையில் அமர்ந்திருந்தார்.
சபாநாயகர் உரையை முடித்ததும், திட்டமிட்டபடி தேசிய கீதத்துக்காக ஆளுநர் எழுந்தார்.
இருப்பினும், சபாநாயகர் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நிரல்களை பின்பற்றுவதற்குப் பதிலாக, ஆளுநருக்கு எதிராக அவதூறாகப் பேசினார்.
நாதுராம் கோட்சே மற்றும் பலரை (Governor’s explanation) ஆளுநர் பின்பற்றுவதாக சபாநாயகர் கூறினார்.
Also Read : https://itamiltv.com/sk21-update-will-be-released-this-evening/
சபாநாயகர் தனது அநாகரிகமான நடத்தையினால், சபையின் கவுரவத்தையும், அவரது நாற்காலியின் கவுரவத்தையும் குறைத்தார்.
சபாநாயகர், ஆளுநருக்கு எதிராகக் கடுமையாகத் தாக்கியபோது, ஆளுநர் தமது பதவி மற்றும் சபையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு சபையை விட்டு வெளியேறினார் என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.