நடிகர் அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு லியோ(leo) படத்திலிருந்து அவரது கதாப்பாத்திரத்துக்கான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கன்னட நடிகர் சக்தி பிரசாத்தின் மகனான அர்ஜுன் 1981-ல் வெளியான ‘சிம்மதா மரி சைன்யா’ என்னும் படத்தின் கதாநாயகனாக திரைத் துறைக்கு அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் 1984-ல் ராமநாராயணன் இயக்கத்தில் ‘நன்றி’ என்னும் திரைப்படத்தில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து ஆத்தா நா பாஸாயிட்டேன்,தங்கைக்கு ஒரு தாலாட்டு ,சேவகன்,ஜெண்டில்மேன் ,கோகுலம் ,ஜெய் ஹிந்த்,பிரதாப் உள்ளிட்ட படங்களில் நடித்து ஆக்ஷன் கிங்காக வலம் வந்தார்.
தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டு காலத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னணிக் கதாநாயகனாகவும் கடந்த பத்தாண்டுகளில் குணச்சித்திர, வில்லன் நடிகராகவும் வெற்றிகரமாக இயங்கிவருபவரான நடிகர் அர்ஜுன் இன்று தனது 61 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் விஜய்யை தொடர்ந்து திரிஷா, சஞ்சய் தாத்தா, அர்ஜூன், கௌதமேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். கேங்ஸ்டர் படமாக உருவாகி உள்ளது.
இந்த நிலையில்,அர்ஜுன் இன்று 61 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அர்ஜுன் கேரக்டர் குறித்த கிளிம்ப்ஸ் வெளியாக உள்ளது. லியோ படத்தில் சஞ்சய் தத்தின் தம்பியாக அர்ஜுன் நடித்திருக்கும் நிலையில் இதனை நிரூபிக்கும் வகையில் தாஸ் என இவருடைய பெயர் முடிவடைகிறது.