குடியாத்தத்தில் சிறுத்தை நடமாட்டமுள்ளதால் இரவு நேரத்தில் தனியாக செல்வதை தவிர்க்க
வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
குடியாத்தத்தில் சிறுத்தை நடமாட்டமுள்ளதால் இரவு நேரத்தில் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் வீட்டின் வெளிப்புறங்களில் விளக்குகளை எரியவிட வேண்டும்.
Also Read : ரிசர்வ் வங்கி அங்கீகாரமின்றி கடன் வழங்கினால் 10 ஆண்டு சிறை..!!
சிறுத்தை நடமாட்டத்தை அறிந்தால் 97155 16707 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்; சிறுத்தை நடமாட்டம் குறித்து ட்ரோன் கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணித்து வருவதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.
குடியாத்தத்தில் சிறுத்தை தாக்கி பெண் உயிரிழந்த நிலையில் அப்பகுதி மக்கள் கடும் பீதியில் இருந்த நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவித்துள்ளார்.