திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக ( Leopards in Tirupati ) அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
உலக பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெரும்பாலான பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப நடைபாதை வழியாக திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்வது வழக்கம். அவ்வாறு செல்லக்கூடிய மலை பாதையில் லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதி அருகே சிறுத்தைகள் நடமாட்டம் அதிகம் இருவதாக தகவல் வெளியாகி இருந்தது .
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்கதர்கள் சில சிறுத்தையின் தாக்குதலுக்கு ஆளாகியும் உள்ளனர் . இதையடுத்து மலைப்பாதை முழுவதும் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு கூண்டுகள் அமைக்கப்பட்டு வனத்துறையினர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
Also Read : கேப்டன் விஜயகாந்த்துக்கு பத்மபூஷன் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து..!!
இந்நிலையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதை சாலையில் ஒரு சிறுத்தை நேற்று நடமாடியுள்ளது. அதிகாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த பக்தர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பான காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது. இதனையடுத்து ( Leopards in Tirupati ) வனத்துறை அதிகாரிகள் எச்சரித்து பக்தர்களை அனுப்பி வருகின்றனர். திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் தற்போது தற்போது பதற்றத்துடன் மலையேறியும் இறங்கியும் வருகின்றனர்.