அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் களமிறங்க ஆதரவு தெரிவித்து உள்ள முன்னாள் அதிபர் ஒபாமா, அவர் வெற்றி பெறுவதை உறுதி செய்வோம் எனக் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 5ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
Also Read : மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு
ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடன், 81, போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கட்சியின் அதிபர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பலரும் போர்க்கொடி துாக்கினர். இதனால், போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகினார்.
மேலும், கட்சியின் வேட்பாளராக, துணை அதிபர் கமலா ஹாரிசை நிறுத்த அவர் ஆதரவு தெரிவித்திருந்தார். அடுத்த மாதம், 19 – 22ல் சிகாகோவில் நடக்க உள்ள கட்சி மாநாட்டில், அதிபர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார். கமலா ஹாரிசுக்கு கட்சியின் பல மூத்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.