Site icon ITamilTv

“ஈரோடு இடைத்தேர்தலில் வெல்ல சசிகலாவை சந்திப்போம்” – ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகி பி.வி.கே.பிரபு!

Spread the love

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்ள சசிகலா உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களை சந்திப்போம் என்று நாகையில் அதிமுக ஓபிஎஸ் அணியின் கழக அமைப்பு செயலாளர் பி.வி.கே.பிரபு  தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணி சூடு பிடித்துள்ள நிலையில் நாகையில் அதிமுக ஓபிஎஸ் அணியின் கழக அமைப்பு செயலாளர் பி.வி.கே.பிரபு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் ; எடப்பாடி பழனிச்சாமிக்கு வாக்களிக்காமல் இருந்தால் மட்டுமே, அதிமுகவை மீட்க முடியும் என்று கூறிய அவர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும்.

மேலும் துரோகத்தின் மொத்த உருவமாக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்று கடுமையாக விமர்சித்த அவர், சசிகலாவால் உருவாக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஓஎஸ்.மணியன் போன்றோர் வளர்த்துவிட்டவர்களை கழற்றிவிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக ஓரணியாக மாறும் என்றும், வலுசேர்க்கும் வகையில் சசிகலா கட்சி தலைவர்களை கூட்டணிக்காக அழைக்க இருப்பதாக கூறினார்.

எம்ஜிஆர் , ஜெயலலிதா என மிகப்பெரிய அரசியல் ஜாம்பவான்கள் இருந்த அதிமுகவின் பொது செயலாளர் பதவிக்கு ஆசைப்படும் எடப்பாடி அதனை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்று கூறினார்.


Spread the love
Exit mobile version