8வது முறையாக பாலன் டி ஓர் விருதை வென்றார் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி..!!

கால்பந்து விளையாட்டில் மிக முக்கிய விருதுகளில் ஒன்றாக பார்க்கபடும் பாலன் டி ஓர் விருதை நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 8ஆவது முறையாக வென்றுள்ளார்.

உலகில் இருக்கும் பெரும்பாலான மக்கள் அதிகம் விரும்பப்படும் நட்சத்திர விளையாட்டு வீராக வலம் வருபவர் லியோனல் மெஸ்ஸி . கடுகு சிறிதானாலும் அதன் காரம் பெரியது என்ற பழமொழிக்கேற்ப உருவத்தில் சிறியவராக இருந்தாலும் கால்பந்து மைதானத்தில் அவரது திறமையை கண்டு கை தட்டாத ஆட்களே கிடையாது .

கடந்த ஆண்டு நடைபெற்ற 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் , இறுதி சுற்றில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை கைப்பற்றி சாதனைப் படைத்தது .

இதையடுத்து பல அணிகளுக்காக விளையாடி வந்த மெஸ்ஸி தற்போது அமெரிக்காவின் இண்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.

கால்பந்து விளையாட்டில் இதுவரை பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள மெஸ்ஸி பல விருதுகளை வென்று குவித்துள்ளார் . அந்தவகையில் தற்போது கால்பந்து விளையாட்டில் மிக முக்கிய விருதுகளில் ஒன்றாக பார்க்கபடும் பாலன் டி ஓர் விருதை மெஸ்ஸி 8ஆவது முறையாக வென்றுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் கால்பந்தாட்ட உலகில் சிறந்து விளங்கும் வீரருக்கு பலன் டி ஒர் விருது வழங்கப்டுகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பாலன் டி ஓர் விருது 2020 ஆம் ஆண்டு வழங்கப்படவில்லை. இதில் 2009, 2010, 2011, 2012, 2015, 2019, 2021 மற்றும் 2023ம் ஆண்டு என 8 முறை இவ்விருதை நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார்.

Total
0
Shares
Related Posts