”விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் அனுமதி விவகாரம்..” -அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!!

விளையாட்டு மைதானங்களில் மதுபானங்களை அனுமதித்தால் ஏற்படும் விளைவுகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்(High Court) கேள்வி எழுப்பியுள்ளது.

திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்த அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு விளையாட்டு மைதானங்கள், மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என தெரிவிக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

தமிழக அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள்:

  • உரிமம் பெற்றவர், மாநகராட்சி எல்லைக்குள் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்காகவும், மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு காவல் கண்காணிப்பாளரிடமிருந்தும் தடையில்லாச் சான்றிதழைப் பெற வேண்டும்.
  • உரிமம் பெற்றவர், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகம் லிமிடெட் மொத்த விற்பனைக் கிடங்கில் இருந்து அல்லது துணை ஆணையர் / உதவி ஆணையர் (கலால்) நியமிக்கும் அல்லது ஒப்புதல் அளிக்கக்கூடிய பிற இடங்களில் இருந்து பொருட்களைப் பெற வேண்டும். துணை ஆணையர் / உதவி ஆணையரால் (கலால்) அங்கீகரிக்கப்பட்ட பொருட்களின் அளவின்படி பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • மதுபானம் வைத்திருப்பதற்கும் பரிமாறவும் சிறப்பு உரிமம் வழங்குவதற்கான ஒவ்வொரு விண்ணப்பமும் ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட வேண்டும். நிகழ்ச்சி நடத்தப்படவுள்ள நாளிலிருந்து ஏழு வேலை நாட்களுக்கு முன்னதாக மாவட்டங்களில் உள்ள துணை ஆணையர் / உதவி ஆணையர் (கலால்) படிவத்தில் F.A.1.14 பூர்த்தி செய்து அனுப்பியிருக்க வேண்டும்.
  • விண்ணப்பத்துடன் அரசு கருவூலம் அல்லது பாரத ஸ்டேட் வங்கியின் அசல் சலான் நகலின் ரிமிட்டர் நகலுடன், உரிமக் கட்டணத்தை செலுத்திய ரசீதை இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • அத்தகைய விண்ணப்பத்தைப் பெற்றவுடன், மாவட்டத்தில் உள்ள துணை ஆணையர் / உதவி ஆணையர் (கலால்) அதனை சரிபார்த்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்திய பிறகு, மாவட்டத்தின் முன் அனுமதியுடன் F.L.12 படிவத்தில் சிறப்பு உரிமம் வழங்கப்படும்.
  • சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் துணை ஆணையர் / உதவி ஆணையர் (கலால்) F.T.P படிவத்தில் போக்குவரத்து அனுமதியைப் பெற்ற பிறகு உரிமம் பெற்றவர் மதுபானத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதை எதிர்த்து சமூக நீதி வழக்கறிஞர்கள் பேரவை தலைவரான வழக்கறிஞர் கே.பாலு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “சர்வதேச கருத்தரங்குகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் இடங்கள் பொது இடங்கள் என்பதால் அங்கு மது அருந்துவது என்பது சட்டப்படி குற்றமாகும் ஆகவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், ஒரு விளையாட்டு மைதானத்தில் 75 ஆயிரம் பேர் கூடுகின்றனர் என்றால் அவர்கள் அனைவரும் மதுபானங்கள் அருந்த அனுமதித்தால் ஏற்படும் விளைவுகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.

மேலும் இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்கவேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை வரும் நவ.24-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

Total
0
Shares
Related Posts