சென்னை உள்ள பிரபல உணவகத்தில் பார்சல் வாங்கிய பிரியாணியில் பல்லி கிடந்த சமபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள பிஸ்மி என்ற உணவகத்தில் தனது குடும்பத்தினருக்கு சிக்கன் பிரியாணி பார்சல் வாங்கி சென்றுள்ளார்.
Also Read : ‘வேட்டையன்’ படத்தின் ட்ரெய்லர் தேதி அறிவிப்பு..!!
வீட்டிற்கு சென்றதும் குடும்பத்தினருடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ராஜ்குமாரின் மனைவி சுவாதி மற்றும் இரண்டு மகன்கள் வாந்தி எடுத்துள்ளனர். உடனே பிரியாணியை சோதனை செய்து பார்த்தபோது பிரியாணியில் இறந்த நிலையில், பல்லி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பெருகும் உடல் உபாதை ஏற்பட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.