பிரபல தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து தற்போது 7 வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது .
இதுவரை முடிந்த இந்த 6 சீசன்களில் மக்களுக்கு மிகவும் பிடித்த சீசன் எதுஎன்றால் சிறுபிள்ளையும் சொல்லிவிடும் அது 3 வது சீசன் என்று . குழுந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 3 வது மாபெரும் வரவேப்பை பெற்றுத்தந்தது .
இந்த சீசனில் பங்கேற்ற கவின் , சாண்டி , லாஸ்லியா , தர்சன் , முகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தெப்போது வெள்ளி திரையில் ஜொலித்துக்கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக இந்த கவின் மற்றும் லாஸ்லியா இருவருக்குமே ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு உள்ளது .
பிக் பாஸ் வீட்டுக்குள் இவர்கள் இருவரும் காதல் ரயிலை ஓட்டி வந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியில் வந்த பிறகு இவர்களுது உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டு அவர்களது காதல் முடிவுக்கு வந்தது .
இதையடுத்து இருவரும் அவர்களது திரைப்பயணத்தில் மிகவும் பிஸியாக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் நடிகர் கவின் தன்னுடைய நீண்ட நாள் காதலியான மோனிகாவை சத்தமின்றி திருமணம் செய்துகொண்டார்.
இவர்களின் திருமண நிகழ்ச்சியில் நெல்சன் திலீப்குமார், மாரி செல்வராஜ், பிரியங்கா மோகன், புகழ் என பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர் .
இந்நிலையில்,கவின் திருமணம் குறித்து நடிகை லாஸ்லியா முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் .
கவின் திருமணம் குறித்து லாஸ்லியா கூறியதாவது :
‘கவினின் வளர்ச்சி ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. கெரியரிலும் அவர் சூப்பரா வளர்ந்து வரார் . சொந்த வாழ்க்கையிலும் கவின் நல்லா பண்ணிட்டு இருக்காங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு’ என நடிகை லாஸ்லியா மனம் திறந்து பேசியுள்ளார்.