உள்ளாட்சித் தேர்தல் பணியின் போது எதிர்பாராத வகையில் உயிரிழக்கும் மற்றும் காயமடையும் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை தமிழ்நாடு அரசு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
உள்ளாட்சித் தேர்தல் பணியின் போது எதிர்பாராத வகையில் உயிரிழக்கும் மற்றும் காயமடையும் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது
குண்டுவெடிப்பு தாக்குதல், சமூக விரோத தாக்குதல் போன்ற காரணங்களால் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ₹10 லட்சத்தில் இருந்து ₹30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
Also Read : கல்லூரி விடுதியில் மாணவி மர்ம மரணம் – தினகரன் வேதனை
பிற காரணங்களால் உயிரிழப்பவர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ₹5 லட்சத்தில் இருந்து ₹15 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர உடல் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ₹2.5 லட்சத்தில் இருந்து ₹7.5 லட்சமாக உயர்ந்துள்ளது.
சிறு காயம் ஏற்பட்டவர்களுக்கு வழங்கும் இழப்பீட்டுத் தொகை ₹10,000ல் இருந்து ₹40,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.